Posts

புகையும் பகையும்

 புகை பிடிப்பது என்பது எவ்வளவு சுவாரசியமானது அதில் அவ்வாறு என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம்.. ஒரு நண்பர்கள் கூட்டத்தில் இருக்கிறோம் என்றால் மூவர் புகைக்கிறார்கள் என்றால் ஒருவன் புகைக்கவில்லை என்றால் அவனைக் கேலியும் கிண்டலும் தான் அதிகம் செய்வார்கள். நானோ பெங்களூருவில் தங்கும் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தேன் அன்றைய தினம் என்னுடைய வேலையை முடித்துவிட்டு விடுதிக்கு சென்று உறங்க ஆரம்பித்தேன். எங்கள் விடுதியில் ஒரே அறையில் நான்கு பேர் தங்கி இருந்தோம் அதில் மூன்று பேரும் கன்னடர்கள் நான் ஒருவன் மட்டும் தமிழன். அன்றைய தினம் நான் உறங்கி இருந்த வேளையில் மணி ஒரு ஒன்பதரை பத்து இருக்கும். அந்த மூவரில் ஒருவர் புகைக்கும் குடிக்கவும் மாட்டார் . அவர் என் இனத்தை சார்ந்தவர் ஆனாலும் அவர்களுக்கு நல்ல கம்பெனி கொடுப்பார்.. நானும் பணி களைப்பில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன் .ஆனால் புகையின் வாசம் ஒருபுறமும் கஞ்சாவின் வாசனை மறுபுறமும் அதுமட்டுமல்லாமல் கண்ணாடி குவளையில் மதுவும் வைத்து சந்தோசமாக குடித்தும் புகைத்தும் மகிழ்ந்தனர்.. அதில் ஒருவர் எனக்கு நல்ல நண்பர் அவர் என்னிடம...

தலைப்பு

என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இந்த பதிவில் குறிப்பிடுகிறேன். என் பெயர் அரவிந்தன். நான் தகடூர் என்னும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவன். நான்கு ஆண்டு பொறியியல் பட்டபடிப்பு படித்து விட்டு தற்போது ஒரு தனியார் துறையில் பணி புரிந்து வருகிறேன்..  *வாகையம்மா* என்பது இந்த பிளாக்கின் பெயர். வாகை என்றால் வெற்றி. விஜயா என்பது எனது தாயாரின் பெயர் விஜயா என்ற சொல்லுக்கு வெற்றி என்பது வடமொழியில் பொருளாகும் அதை தமிழில் வாகை சூடுவர் என குறிப்பிடுவர். அம்மா என்றால் கொள்ளைப் பிரியம் இருப்பினும் கலியுகம் என்னையும் என் தாயையும் பிரித்து வைத்து விட்டது.. தாயாரின் உடன் இருக்கும் வரை அவருடைய அருமை என்னவென்று புரியவில்லை ஆனால் அவர் இப்போது இல்லாத பொழுது ஒவ்வொரு நாளும் என்னை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். அவருடைய பெயரை தமிழில் மாற்றி அதனுடன் அம்மா என்ற சொல்லை இணைத்து தலைப்பாக வைத்துள்ளேன்.